திருமணமான மூன்றே மாதத்தில் துணைவிக்கு தான் கொடுத்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர்..!!

திருமணமாகி மூன்றே மாதங்கள் ஆன நிலையில், தனது மனைவி முன்னிலையிலேயே மற்றொரு பெண்ணை தனக்கு துணையாக சேர்த்துக்கொண்டார் தாய்லாந்து மன்னர்.

தாய்லாந்து வரலாற்றிலேயே முதல் முறையாக பல தார மணத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் வகையில், Sineenat Wongvajirapakdi (34) என்ற முன்னாள் ராணுவ நர்சை, நேரலை நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் போலவே கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது வைப்பாட்டியாக (concubine) ஏற்றுக்கொண்டார் மன்னர் Vajiralongkorn.

அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் தாய்லாந்து விமான பணிப்பெண்ணாக இருந்த Suthida என்ற பெண்ணை மணந்து மகாராணியாக்கியிருந்தார் அவர்

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்கள், அதே போல் அடுத்த மூன்றே மாதங்களில், தனது ராஜாங்க வைப்பட்டியாக இருந்த Sineenatஇன் பதவியை பறித்துள்ளார் மன்னர்.

மன்னருக்கு உண்மையாக இல்லாதது, மற்றும் மகாராணிக்கு சமமாக நடந்துகொள்ள முயன்றது ஆகிய காரணங்களுக்காக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது

ராஜ அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், Sineenat மன்னருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும், ராஜ மரபுகளை புரிந்துகொள்ள அவரால் முடியவில்லை என்றும், தனக்கே நன்மை வரும்படியாக சுயநலமாக நடந்துகொள்கிறார் என்றும், தன்னை மகாராணிக்கு சமமாக ஆக்க முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பிளேபாய் என்று அழைக்கபட்ட மன்னர், மோசமான உடைகளுடன் Sineenatஉடன் காணப்படும் படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியபோதுதான், முதல்முதலாக Sineenat வெளி உலகுக்கு காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது

Comments (0)
Add Comment