யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் சடுதியான வீழ்ச்சி!! (வீடியோ)

யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

யாழின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச்சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம்(08) ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 30 ரூபாவாக விற்பனையானது.

முன்னர் 50 ரூபாவாக விற்பனையான ஒரு கிலோ இதரை வாழைப்பழம் இன்றைய தினம் 40 ரூபாவாகவும் விற்பனையானது.

தற்போதைய மழை மற்றும் பனியுடனான காலநிலை மற்றும் காற்றுக் காரணமாகத் தினமும் சந்தைக்கு வாழைப்பழக் குலைகளின் வரத்து அதிகரித்துள்ளமை ஆகியவையே வாழைப்பழங்களின் விலை வீழ்ச்சிக்கு காரணமென வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ். குடாநாட்டின் ஏனைய சந்தைகளிலும் கதலி மற்றும் இதரை வாழைப்பழங்கள் தற்போது குறைந்த விலைகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

Comments (0)
Add Comment