குடும்ப பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை!! (படங்கள்)

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபுரம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 31 வயதான அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் கணவன் வெளிமாவட்டம் சென்றிருந்த நிலையில் இன்று காலை வீடு திரும்பிய அவர் சம்பம் தொடர்பில் அவரே பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார் சடலம் பிரேத பரிசோதனைகளிற்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கராயன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment