நிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்..!!!

மத்திய அரசின் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்
மன்மோகன் சிங்
புதுடெல்லி:

மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அறிவுரை அளிக்கவும் கொள்கை வடிவிலான செயல்பாடுகள் குறித்து விவாதித்து ஆலோசனை கூறவும் பாராளுமன்ற நிலைக்குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்த குழுவில் கட்சி பாகுபாடின்றி பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமாக பதவி வகிப்பவர் நியமனம் செய்வது மரபாக இருந்து வருகிறது.

அவ்வகையில், நிதித்துறைக்கான பாராளுமன்ற குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங், நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments (0)
Add Comment