யாழ். புன்னாலைக்கட்டுவனில் திருமணச் சடங்கில் தேர்தல் பிரசாரம்!! (படங்கள்)

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு கோரி யாழ்.புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற திருமணச் சடங்கு வைபவமொன்றில் தேர்தல் பிரசாரம் நடாத்தப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) பகல் புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருமணச் சடங்கு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மக்கள் மத்தியிலேயே இவ்வாறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், சஜித் ஆதரவாளர்கள் சிலரும் இணைந்து முன்னெடுத்த தேர்தல் பிரசாரத்தில் மேற்படி திருமணச் சடங்கு வைபவத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சஜித் பிரேமதாஸவின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பிரசுரங்கள் மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment