வவுனியாவில் பலத்த பொலிஸாரில் மத்தியில் சஜித் ஆதரவு கூட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் பலத்த பொலிஸாரில் மத்தியில் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரவு கூட்டம் : மக்கள் புறக்கணிப்பு

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு வவுனியா பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (12.11.2019) காலை 10.00 க்கு இடம்பெறவிருந்த நிலையில் 12.00 ஆகியும் இதுவரை இடம்பெறவில்லை

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் தயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்குபற்றவிருந்த நிலையில் அவர்களின் வருகையின்மை காரணமாக இரண்டு மணிநேரம் கடந்தும் இதுவரை குறித்த மக்கள் சந்திப்பு ஆரம்பமாகவில்லை.

இதன் காரணமாக கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த மக்கள் சிலர் விரகர்த்தில் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமையுடன் தற்சமயம் இக் கூட்டத்தில் 40 பொதுமக்கள் வரையிலேயே காணப்படுகின்றனர். மிகுதி கதிரைகள் வெறிச்சொடி காணப்படுகின்றது.

அத்துடன் குறித்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் பொலிஸ் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

இன்றும் ஒரு மணி நேரத்தினுள் சஜித் பிரேமதாச அவர்களின் தயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment