ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றது ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஒழித்துக்கட்டுவதற்காக ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து பதற்றம் அதிகரித்துள்ளது. அசம்பாவித சம்பங்களை தவிர்ப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கந்தர்பால் மாவட்டம் கந்த் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

Comments (0)
Add Comment