சஜித் பிரேமதாச சஜித் அவர்களின் தாயார் வவுனியா விஜயம்!! (படங்கள்)

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சஜித் பிரேமதாச சஜித் அவர்களின் தாயார் வவுனியா விஜயம்

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு வவுனியா பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (12.11.2019) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் தயார் , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு காலை 10.00 க்கு என ஒழுங்கமைப்பு மேற்கொண்டு சந்திப்புக்கு மக்கள் வருகை தந்திருந்த போதிலும் சஜித் பிரேமதாச அவர்களின் தயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தாமதம் ஏற்பட்டதினால் குறித்த சந்திப்பு மதியம் 12.00 மணிக்கு பின்னரே இடம்பெற்றிருந்தது.

இதன் காரணமாக கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த மக்கள் சிலர் விரகர்த்தில் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமையுடன் இறுதியில் அவர்களின் வருகையின் பின்னர் குறித்த மக்கள் சந்திப்பில் 80 மக்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக குறித்த சந்திப்பில் பல கதிரை வெறிச்சோடி காணப்பட்டது.

அத்துடன் குறித்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் பலத்த பொலிஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

சஜித் பிரேமதாச அவர்களின் தயார் “எங்கட மகனுக்கு உங்கட வாக்கை போடுங்க” என தமிழில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

வவுனியாவில் பலத்த பொலிஸாரில் மத்தியில் சஜித் ஆதரவு கூட்டம்!! (படங்கள்)

Comments (0)
Add Comment