ரத்தத்தை எடுக்க 10 மாத குழந்தையிடம் பாட்டு பாடிய மருத்துவர்.. அழாமல் சமர்த்தாக ஒத்துழைத்த பாப்பா! (படங்கள், வீடியோ)

10 மாத குழந்தையிடம் இருந்து ரத்தத்தை பெற மருத்துவர் ஒருவர் பாட்டு பாடியதும் அதை ரசித்த குழந்தை ரத்தம் எடுத்ததற்கு அழாததும் தற்போது வைரலாகி வருகிறது. மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை செய்வதற்கு குத்தப்படும் ஊசியின் வலியை ஒரு சில பெரியவர்களே தாங்க முடியாமல் கண்களை இறுக்க மூடி கொள்வதும், “ஸ்ஆ..” என கத்துவதையும் பார்த்துள்ளோம்.

மருத்துவர் ரியான் இதே குழந்தைகளுக்கு ரத்தம் எடுப்பது என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் பிறந்து 10 மாத குழந்தைக்கு ரத்தம் எடுக்கும் பணி குழந்தைகள் நல மருத்துவரான ரியான் கொய்ட்ஸீயிடம் வழங்கப்பட்டது. வைரல் வைரல் அவர் உடனே சற்றும் தாமதிக்காமல் Nat king cole’s classic என்ற பாடலை பாட தொடங்கினார். அதை குழந்தையும் ரசித்தது. அப்போது மெதுவாக ஊசி மூலம் ரத்தத்தை எடுக்கிறார்.

குழந்தையும் அழாமல் பாட்டை ரசித்தது. இந்த வீடியோவை குழந்தையின் தாய் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ள நிலையில் அது வைரலானது. இசையில் தேர்வு இசையில் தேர்வு இதுகுறித்து மருத்துவர் ரியான் கொய்ட்ஸீயிடம் கேட்ட போது இது போல் பாட்டு பாடுவது வாடிக்கையான ஒன்றுதான். அதை பார்ப்போர் வேடிக்கையாக நினைப்பர். ஆனால் குழந்தைகள் ரசிப்பார்கள் என்றார் அவர்.

ரியான் மருத்துவத்துடன் இசையையும் கற்று தேர்ந்துள்ளார். அழாத குழந்தை இந்த மருத்துவர் ரியான் குறித்து குழந்தையின் தாய் கிரேஸி கூறுகையில் இது போன்ற ஒரு மருத்துவரை நான் பார்த்ததே இல்லை. போனவுடன் சிரித்த முகத்துடன் வரவேற்கிறார். எனது 10 மாத மகள் ரத்தம் எடுத்த போது அழாமல் விளையாடிக் கொண்டே இருந்தாள் என கிரேஸி கூறினார்.

Comments (0)
Add Comment