வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்!! (படங்கள்)

வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கதிரேசு வீதி , வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் , கல்வி நிலையங்கள் , வீடுகள் போன்றவற்றிக்கு முன்பாகவும் , கால்வாய்களுக்குள்ளும் , நகரையண்டிய பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment