கற்பகா சுற்றுக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது பாடும் மீன் அணி!! (படங்கள்)

கற்பகா சுற்றுக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது பாடும் மீன் அணி

கிளிநொச்சி கிராஞ்சி உதய செந்தாரகை விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு பதினோரு பேர் கொண்ட விலகல் முறையிலான கற்பகா சுற்றுப் போட்டியில் இறுதி போட்டி நேற்று இரவு ஏழு மணியளவில் கிராஞ்சி உதய செந்தாரகை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

குருநகர் பாடும் மீன் அணியும் வேரவில் ஜெபமீட்ப்பர் அணியும் சுமார் 90 நிமிடங்கள் மோதிய இவ் இறுதிப் போட்டியில் பாடும் மீன்கள் அணி இரண்டு கோல்களை அடித்து வெற்றிக் கிண்ணத்தினையும் எழுபதாயிரம் ரூபா பணப்பரிசினையும் தனதாக்கிக் கொண்டது இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட வேரவில் ஜெபமீட்ப்பர் அணியும் இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கின்னத்தியும் நாற்பதாயிரம் ரூபா பணப்பரிசினையும் தமதாக்கிக் கொண்டனர்.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா , மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் நிமலதாசன் கலந்துகொண்டு வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment