1000 கோடி இழப்பீடு கோரும் சுமந்திரன்! (படங்கள், வீடியோ)

தான் சொல்லாத ஒரு செய்தியை வேண்டுமென்றே திரிவுபடுத்தி வெளியிட்ட கோட்டாபய ஆதரவு பத்திரிகையான சிலோன் ருடேயிடம் 1000 கோடி இழப்பீடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

அண்மையில் மாங்குளத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில், சிங்களவர்ளை தோற்கடிக மாத்திரமே சஜித்தை ஆதரிப்பதாக சுமந்திரன் உரையாற்றியதாக நேற்று அருண பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதை சுமந்திரன் மறுத்திருந்தார். அத்துடன், செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயும் அமைப்பொன்றும் இது போலியான செய்தியென நேற்றே அறிக்கையிட்டிருந்தது.

இந்தநிலையில், கோட்டாவின் இன்னொரு ஆதரவு பத்திரிகைகளான சிலோன் ருலோ, மவ்பிம ஆகியன இன்று அதே செய்தியை பிரசுரித்திருந்தன.

இது குறித்து இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், பதில் காவல்த்துறைமா அதிபரிடமும் முறையிட்டிருந்தார். இனங்களிற்கிடையில் குரோதம் ஏற்படுத்தவதாக குறிப்பிட்டு, பத்திரிகை ஆசிரியர்களையும், தொடர்புடையடைய செய்தியாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து மூன்று பத்திரிகைகள் மீதும் 1000 கோடி இழப்பிடு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

தமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்!!

‘அதிகார பகிர்வு தொடர்பில் கோட்டா வாயே திறக்கவில்லை’ !!

TNA கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர் பொலிஸாரால் கைது.!!

சம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா அம்மான்!! (வீடியோ)

சங்கிலியன் பூங்காவில் TNA பிரசாரக் கூட்டம்!! (படங்கள்)

யாழ்.நல்லூரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

Comments (0)
Add Comment