திருகோணமலை உணவகத்தில் பெறப்பட்ட உணவில் தலைமுடி!! (படங்கள்)

திருகோணமலை நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரியண்ட் றேஸ்ரோறண்டில் இன்று பிற்பகல் 7.52 மணியளவில் வாங்கப்பட்ட கடலுணவுக் கொத்தில் தலைமுடி காணப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் தெரிவிகின்றார்

[13]வீட்டார் விரும்பதன் பெயரில் 1200 ரூபாய் செலுத்தி மூன்று கடலுணவுக் கொத்து வாங்கியதாகவும் அதில் ஒன்றில் தலை முடி காணப்பட்டதுடன் இன்னும் ஒன்று கருகிய உணவாக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர் வாங்கிய உணவுப் பொதியில் ஒன்று மட்டுமே உண்ணக் கூடிய நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பில் குறித்த உணவக தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு வினவிய பொழுது வாடிக்கையாளரை துர்வார்த்தைகளால் திட்டியதுடன் உணவுப் பொதியை எடுத்து வருமாறு பணித்துள்ளனர் வாடிக்கையாளர் உணவுப் பொதியுடன் சென்ற போது உணவகம் மூடப்பட்டமையால் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து உணவக முன்றலில் இருப்பதனை தெரிவித்துள்ளார் அப்பொழுது அவர்கள் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து உள்ளனர் ஆனால் வாடிக்கையாளர் இது தொடர்பில் சுகாதார பரிசோதகருக்கு அறிவிப்பேன் எனக் கூறிய போது அவர்கள் எல்லாம் எங்களிடம் காசு வாங்கும் நாய்கள் நீ எங்சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என துர்வார்த்தைகளால் திட்டியுள்ளனர்

குறித்த உணவகத்தை திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதார பரிசோதகர் அடங்கிய குழு சோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் புத்தியீவிகள் தெரிவிக்கின்றனர் அதுமட்டுமின்றி நகரில் அமைந்துள்ள உணவகங்கள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டு நிற்கின்றனர்
“அதிரடி” இணையத்துக்காக திருகோணமலையில் இருந்து “கோணேஸ்வரன்”

Comments (0)
Add Comment