ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில்

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தின் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகத்தில் வாக்கு என்னும் பிரிவு , வாகனப்பிரிவு , மின்சார சபை பிரிவு , பொலிஸ் நிலைய பிரிவு , ஒழுங்கமைப்பு பிரிவு , வழங்கல் பிரிவு , தொடர்பாடல் பிரிவு , பெறுபேற்றினை அறிவிக்கும் பிரிவு , ஊடகப்பிரிவு என அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு மாவட்ட செயலக வளாகத்தினுள் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் முகமாக வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பகுதியில் பிரிவுக்களுக்கான வரைபடமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

நாளையதினம் வவுனியாவிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment