நிறுவப்பட்டுள்ள அனுமதிபெற்ற தேர்தல் அலுவலகங்களை அகற்ற வேண்டுகோள்!!

வாக்கெடுப்பு பிரிவுகள் மட்டத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ள அனுமதிபெற்ற அறிவித்தல் கொடுக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களை அகற்றுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த அனுமதி பெற்ற தேர்தல் அலுவலகங்களை 14 ஆம் திகதி நள்ளிரவு வரை இயக்கிச் செல்ல முடியும் என்ற போதும், அவற்றின் பிரச்சார நடவடிக்கைகளை 13 ஆம் திகதி நள்ளிரவு தாண்டி இயக்கிச் செய்ய முடியாது எனவும் குறித்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment