ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!! (படங்கள்)

வவுனியாவில் ஊழலை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வவுனியாவில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு அவர்களின் காலப்பகுதியில் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் கற்றாளை , மல்லிகை , மாட்டெரு , மேல்மண் ஆகியவற்றை முறைகேடான முறையில் கொள்வனவு செய்தமை மற்றும் தாண்டிக்குளம் அரசினர் விதை உற்பத்தி பண்ணையில் நெல் அறுவடை இயந்திரத்தினை அனுமதியின்றி வாடகைக்கு அமர்த்தியமை , தாண்டிக்குளம் அரசினர் விதை உற்பத்தி பண்ணையில் உரிய போகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளாது பற்றைக்காடாக காட்சியளித்தமை தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு நேற்று (13.11.2019) வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டினையடுத்து இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த சிறு முறைப்பாட்டுப்பிரிவு பொறுப்பதிகாரி வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் ஊடகவியலாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன் போது ஊடகவியலாளர் வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் வவுனியாவில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கணக்காய்வு அறிக்கையினையும் (நூற்றுக்கு மேற்பட்ட அறிக்கைகளை) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு காண்பித்ததுடன் இதன் பிரகாரமே செய்தி வெளியிட்டேன் என தெரிவித்தார். அத்துடன் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு அவர்கள் நீதிமன்றத்தில் முறைப்பாடு மேற்கொள்ளும் சமயத்தில் ஆதாரங்கள் (வீடியோ , புகைப்படங்கள் , உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள்) அனைத்தினையும் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவும் தயார் என ஊடகவியலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சிறு முறைப்பாட்டுப்பிரிவு பொறுப்பதிகாரி இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என தெரிவித்தமையுடன் இருவரிடமும் வாக்குமூலத்தினை பெற்று முறைப்பாட்டினை நீக்கினார்.

கணக்காய்வு அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளனகணக்காய்வு அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment