சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர் பலி..!!!

சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள பியாங்கோ கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த சுரங்கத்தில் 35 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலக்கரி சுரங்க வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெடி விபத்திலிருந்து 11 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment