பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் ஹரிசங்கர் (17). இவர் சித்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து தனியார் பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டார். ஹரிசங்கர் பஸ்சின் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார்.

இந்த பஸ் ஆம்பாட்டுபாளையம் பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மாணவர் ஹரி சங்கர் தலை மோதியது.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். சகமாணவர்கள் அவரை மீட்டு சித்தூர் தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஹரிசங்கர் இறந்தார். இ,து குறித்து சித்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment