சமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..!!!

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள சேண்ட்ரா பகுதியைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ் ராஜு (வயது 21). இவர் துப்பாக்கி கையில் வைத்திருக்கும் தனது படத்தை சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை தேடி வந்தனர். ரிஷிகேஷ் ராஜு இருக்கும் இடம் பற்றி தகவல் போலீசாருக்கு கிடைக்கவே, ஜால்னா மாவட்டத்தின் படாபூர் நகரில் நேற்று அவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து அந்த துப்பாக்கியும் ஒரு மேகசினும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment