மோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தனது முதல் அரசமுறைப் பயணமாக வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணமாகிறார்.

புதுடில்லி செல்லும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார்.

இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கு இன்று மாலை அவசரமாக வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை மாலையே சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புச் செய்தியைத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர், கோத்தாபய ராஜபக்சவை அரச முறைப் பயணமாக இந்தியா வருகை தருமாறு அழைத்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment