வவுனியாவில் கெரோயினுடன் ஒருவர் கைது! (படங்கள்)

வவுனியாவில் ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான கெரோயினுடன் ஒருவர் கைது

வவுனியாவில் ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான கெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா பிடியாணை பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. திஸ்சலால்த சில்வாவின் உத்தரவுக்கமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி என்.வெலிகல தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தேக்கவத்த பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரை கெரோயினுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கிராம் 970 மில்லிகிராம் கெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா பிடியாணை பொலிஸ் பிரிவினர் சந்தேக நபரை இன்று மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment