அனைத்து அரச ஊழியர்களுக்குமான செய்தி!!

அனைத்து அரச ஊழியர்களினதும் வௌிநாட்டு பயணங்கள் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு நேற்று குறித்த அறிவித்தல் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கு கீழ் இயங்கும் அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிபுரியும் அரச ஊழியர்களுக்கு குறித்த அறிவித்தலை தெரிவிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் குறித்த கடிதம் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments (0)
Add Comment