மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.!! (வீடியோ, படங்கள்)

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment