இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயல்திட்டம் வேண்டும் – நஸிர்!!

இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான புதிய செயல் திட்டமொன்றை ஐனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ அறிமுகம் செய்யவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வ ருமான நஸிர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாக கோத்தாபாய ராஜபக்ஷ பதவியேற்றது முதல் பல்வேறு புதிய திருப்பங்கள் செயலாக்கம் பெற்று வருகின்றன. குறிப்பாக இனவாத அமைப்புகள் எனக் கருதப்பட்டுவந்த பொது பல சேனா அமைப்பு மற்றும் நவ சிங்கள ராவய போன்றன தமது அமைப்புகளை கலைத்துவிடுவதற்கு முன் வந்திருக்கின்றமை சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலின் பின்னராக துருவமயப்பட்டுள்ள இனங்க ளுக்கு இடையிலான ஐக்கியத்தையும் நல்லிணத்தையும் கட்டியெழுப்ப வேண்டி யது அவசியமானதும் அவசரமானதுமான பணியாகும்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்குதான் வாக்களித்துள்ளார்கள் என்ற யாதார்த்தத்தைப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பதியச் செய்ய வேண்டியதும் உணரச்செய்ய வேண்டியதும் மிக அவசியமானதாகும்.

எனவே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஐனாதிபதி கோத்தா பாய ராஜபக்ஷ புதிய செயல்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டும். அதனூ டாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளாகவும் அவர்தம் அபிலாஷைகளாகவும் இருந்த விடயங்களுக்கு தீர்வுகளை எட்டக்கூடிய அம்சங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

அத்தோடு அவ்வாறு அறிமுகம் செய்யப்படும் அம்சங்களை பெரும்பான்மை மக்கள் புரிந்து, ஏற்றுக்கொண்டு அவர்களது ஆதரவுடன் சிறுபான்மை மக்களின பிரச்சினை களுக்கு நிரந்தர தீர்வை எட்டக்கூடிய வழிவகைளை மேற்கொள்ள முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment