கடற்கரையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!!

சிலாபம் கடற்படை முகாமிற்கும் மற்றும் பொலிஸ் நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ள கடற்கரையில் இருந்து கைக்குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிக்க வந்த நபர் ஒருவரின் அறிவிப்பின் பேரில் குறித்த கைக்குண்டு இன்று (21) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டு கடற்கரையில் சிறிய பொதியொன்றின் மீது காணப்பட்டுள்ள நிலையில், கடற்கரையை சுத்தம் செய்யும் போது மீனவரால் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸாரால் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்பிரிவின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments (0)
Add Comment