இரவு நேர பணிகளில் பெண்களை ஈடுபடுத்த கர்நாடக அரசு ஆணை பிறப்பிப்பு..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், மற்ற தொழிற்சாலைகளில் அவர்களை இரவு நேர பணிகளில் பயன்படுத்துவது கிடையாது.

தற்போது தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பெண்களை இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை பணியில் ஈடுபடுத்த கர்நாடக அரசு நேற்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலை சட்ட 1948-ன் கீழ் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக கர்நாடக மாநில அரசு உத்தரவில் கூறியுள்ளது.

இதன்படி தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்கள் இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை பணியாற்றலாம். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Comments (0)
Add Comment