அமெரிக்காவில் காதல்- வெள்ளைக்கார பெண்ணுடன் புதுவை என்ஜினீயர் திருமணம்..!!!

புதுவை அரசு ரோடியர் மில்லில் மேலாளராக இருந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் தீபக் முரளி. என்ஜினீயரான தீபக் முரளி அமெரிக்காவில் உள்ள ராப்லோக்ஸ் என்ற நிறுவனத்தில் துணை தலைவராக இருந்து வருகிறார்.

அவர், அங்கு மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வெள்ளைக்கார பெண் தாரா பையர்ஸ் என்பவரை காதலித்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்து முறைப்படி புதுவையில் வைத்து திருமணம் செய்வது என்று முடிவு எடுத்தார்கள்.

அவர்களது திருமணம் இன்று காலை புதுவை ஆனந்தா திருமண மண்டபத்தில் இந்து வைதீக முறைப்படி நடந்தது. தாரா பையர்ஸ் பட்டு புடவை, மாலை அணிந்து இந்திய மணப்பெண் போலவே காட்சி அளித்தார்.

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணமகள் தாரா பையர்சின் உறவினர்கள் 25 பேர் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் திருமணத்தில் உற்சாகமாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Comments (0)
Add Comment