ஆயுதப்படைகளை பணியில் ஈடுபடுத்தும் உத்தரவையிட்டார் ஜனாதிபதி!!

அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், தேவைப்பட்டால், ஆயுதப்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவை ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச மீளவும் நடைமுறைப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட கட்டளை நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் மீளவும் நடைமுறைப்படுத்தும் உத்தரவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று வர்த்தமானி அறிவிப்பு ஊடாக வழங்கினார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகளுக்கு அமைய, ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் தேவைப்பட்டால் ஆயுதப்படைகளின் உதவியைப் பெற முடியும் என, ஜனாதிபதியின் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்ட பிரகடனத்தைப் போல, இந்த ஒழுங்குமுறைக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறத் தேவையில்லை.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த ஒழுங்குகளை நடைமுறைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment