வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!! (படங்கள்)

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : பல பிரச்சனைகளுக்கு தீர்வு

கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக பதவியேற்றதின் பின்னர் முதல் தடவையாக இன்று (06.12.2019) காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முதலாவதாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் வவுனியாவில் இ.போ.ச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினருக்கு இடையேயுள்ள பல்வேறு பிரச்சனைகளை தான் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்தார்.

அதன் பின்னர் வவுனியா பொதுச்சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்குள்ளவர்களிடம் அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார்.

இவ் விஜயங்களின் போது கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா , மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் , வவுனியா வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment