பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த இடி மின்னலும் இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்கள் போன்று பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

அதேபோல், சப்ரகமுவ, மேல் ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும். பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment