இரணைமடு குளத்தை பார்வையிட சென்ற 3 பேர் விபத்தில் படுகாயம்!!

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதனை பார்வையிட வந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை 07 மணியளவில் இரணைமடு குளத்திற்கு செல்லும் வீதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இரணைமடு குளத்தை பார்வையிட பெரும்பாலான மக்கள் வருகை தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment