26 வயது தாயின் உயிரைக் காப்பாற்றிய 5 வயது மகன்… பிரித்தானியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

பிரித்தானியாவில் ஆபத்தான நிலையில் இருந்த தாயின் உயிரை காப்பாற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவரின் ஐந்து வயது மகனுக்கு பொலிசார் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Durham-ல் இருக்கும் Willington-ஐ சேர்ந்தவர் Caroline Frater. 26 வயதான இவருக்கு Leo Cooper என்ற 5 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் திகதி சமயலறையில் இருந்த Caroline Frater திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு விரைவாக பக்கவாதத்தை ஏற்படுத்த கூடிய நரம்பியல் நோய் இருப்பதால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் இருந்த அவரின் ஐந்து வயது மகன் Leo Cooper உடனடியாக அவசர உதவி எண்ணான 999-க்கு போன் செய்து, தன்னுடைய அம்மா தரையில் விழுந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

அவனிடம் தொடர்ந்து சுமார் 20 நிமிடம் அவசர உதவியாளர் பேசிக் கொண்டிருக்க, அவர் வீட்டிற்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வந்ததால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது நலமாக இருக்கிறார். தக்க நேரத்தில் எந்த ஒரு பதட்டமுமின்றி போன் செய்து, தாயின் உயிரை காப்பாற்றிய Leo Cooper-ஐ பெருமைபடுத்தும் விதமாக அவருக்கு அந்த நேரத்தில் அவசர உதவிக்கு வந்த அதிகாரிகள் விருது வழங்கி கவுரவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே Caroline Frater இந்த நோயை அறிந்துள்ளார், அப்போதே அவர் தன்னுடைய மகனிடம் போன் எப்படி பயன்படுத்துவது, ஏதேனும் அவசரம் என்றால் யாருக்கு போன் செய்ய வேண்டும்? தன்னுடைய மருத்து மாத்திரைகள், வீட்டின் முகவரி போன்றவைகளை மனப்பாடம் செய்ய வைத்துள்ளார்.

அதுவே தற்போது அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவியுள்ளது என்று Caroline Frater தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment