கோண்டாவில் குட்டி சுட்டிகளின் கலைவிழா..!! (படங்கள்)

கோண்டாவில் அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தினதும் குமரன் விளையாட்டுக் கழகத்தினதும் ஆதரவில் இயங்கும் குட்டி சுட்டி முன்பள்ளியின் வருட நிறைவுக் கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 08 12 2019 கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் து. சுதன் தலைமையில் நடைபெற்றது

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி பணிப்பாளர் ஜெயா தம்பையா , கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், தொழிலதிபர் ஈ.எஸ்.பி. நாகரத்தினம், யாழ் போதனா மருத்துவமனை வைத்தியர் ச.கணேஸ்குமார், இளைப்பாறிய அதிபர் சண். வாமதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்

முன்பள்ளியில் கல்விகற்ற 105 பிள்ளைகளும் அவர்களுக்கு கற்பித்த ஆறு ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் பல முன்பள்ளி சிறார்களினால் ஆற்றுகை செய்யப்பட்டன. நிகழ்வுகளை சா.பபிசன் முன்னிலைப்படுத்தினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment