திருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண் கைது..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞாலகுடா அடுத்துள்ள படியூரை சேர்ந்தவர் அன்சியா (வயது 22). இவர் வேலை தேடும் பெண்களை குறி வைத்து பழகுவார். பின்னர் அவர்களை வீட்டுக்கு அழைத்துச்செல்வார்.

அங்கு மயக்க பிஸ்கெட்டு கொடுத்து இளம்பெண்களை மயக்கமடைய செய்வார். அவர்கள் மயங்கிய நிலையில் இருக்கும்போது அவர்களிடம் இருக்கும் நகை, பணத்தை பறித்துவிடுவார். சிலர் போலீசில் புகார் தெரிக்கவில்லை. ஒருசிலர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அன்சியாவை தேடும்போது வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்து விடுவார். இதனால் இளம்பெண்ணை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வலுவான ஆதாரங்களுடன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இளம்பெண் அங்குள்ள பஸ் நிலையத்தில் நின்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

அன்சியா கைது செய்யப்பட்ட விபரம் தெரியவந்ததும் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் புகார்களுடன் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.

Comments (0)
Add Comment