பிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்..!!

பிரித்தானியாவின் ரோம்ஃபோர்ட் பகுதியில் மருத்துவர் ஒருவர் தம்மிடம் சிகிச்சை பெற வந்த 25 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள ரோம்ஃபோர்ட் பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான மருத்துவர் மனீஷ் ஷா.

இவரே தம்மிடம் சிகிச்சை பெற நாடிய 25 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.

கடந்த 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை இவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான Ms Goody-ன் சோகமான வாழ்க்கையை சுட்டிக்காட்டி ஒரு பெண் நோயாளியை ஸ்மியர் பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தியதாக மருத்துவர் மனீஷ் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மட்டுமின்றி தோள்பட்டை வலியால் அவதிக்குள்ளான பெண் ஒருவருக்கு திரைப்பட நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலியின் புற்றுநோயைத் தடுக்கும் double mastectomy-ஐ மேற்கோள் காட்டி அவரின் மார்பகத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் மருத்துவர் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் 2013 ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்ததும் மருத்துவ பயிற்சியில் இருந்து ஷா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இவர் மீது சுமத்தப்பட்ட 21 பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளில் 13-ஐ மருத்துவர் ஷா மறுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் Old Bailey நீதிமன்ற நீதிபதி Anne Molyneux எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் திகதி மருத்துவர் ஷா வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

Comments (0)
Add Comment