எரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய ஹீரோ..!!

வெள்ளை தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட, தனது உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரை படகின் கேப்டனை பொதுமக்கள் ஹீரோ என புகழாரம் சூட்டி வருகின்றனர்.

நியூசிலாந்தின் வெள்ளை தீவில் அமைந்துள்ள எரிமலையானது நேற்றைய தினம் திடீரென வெடித்து சிதறியதில், பார்வையிட சென்றிருந்த சுற்றுலாப்பயணிகளில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும், 8 பேர் மாயமாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது கேப்டன் பால் கிங்கி என்கிற படகு ஒட்டி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். வெடிப்பு ஏற்படுத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் அவர் அங்கிருந்து கிளம்பியதாக, அவருடைய நண்பர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு கடும் நச்சு புகைக்கு மத்தியில், பால் கிங்கி தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவருடைய மனிதநேயமற்ற முயற்சியை பாராட்டியிருப்பதோடு, அவர் திருப்தி அடையும் வரை காயமடைந்த பலரையும் மீட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த மனிதநேயமற்ற முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை, ஏனெனில் இந்த நல்ல மனிதரை நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன்’.

ஆனால் இவை அனைத்தும் ஒரு சோகமான சூழ்நிலையில் தான் நடந்தன. அவருடைய சிறுவயது நண்பரும் சக ஊழியருமான ஹேடன் மார்ஷல்-இன்மன் எரிமலை விபத்தில் பலியாகியிருந்தார் என பதிவிட்டுள்ளார்

Comments (0)
Add Comment