பிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

டிசம்பர் 12ஆம் திகதி பிரித்தானியா பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள், ஐந்தாண்டிற்கு ஆட்சியில் இருக்கும்.

பொதுவாக பிரித்தானியா தேர்தல் குறித்து ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து பார்க்கலாம்.

தேர்தல் எதற்காக இந்த தேர்தலில் 650 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். நாட்டை நடத்தி செல்வதற்காக சட்டங்களை உருவாக்கி, வழிநடத்த இந்த அரசாங்கம் உருவாக்கப்படும்.

வாக்கெடுப்பு முறை 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் இத்தேர்தலில் வாக்களிக்கலாம். 46மில்லியன் வாக்காளர்களில் அவரவர் தங்களின் தொகுதிகளில் வாக்களிக்கலாம்.

யாரெல்லாம் போட்டியிட முடியும் தேர்தல் நடைபெறும் திகதியில் 18வயது பூர்த்தியடைந்த யாரும் போட்டியிடலாம். அவர்கள் பிரித்தானியாவின் குடிமகனாகவோ, அல்லது பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற காமன்வெல்த் நாட்டை சேர்ந்தவராகவோ இருக்கலாம்.

மேலும், வேட்பாளரகள் 500 பவுண்ட் வைப்பு நிதியாக கட்டவேண்டும். ஆனால் அந்த வேட்பாளர் குறைந்தது ஐந்து சதவிகிதம் வாக்குகள் பெற வேண்டும். இல்லையேல் அவர் டெபாசிட் திரும்ப பெற தகுதியில்லாதவர் ஆவார்.

சிறைவாசிகள், நீதிபதிகள், காவல்துறையினர், ஆயுதப்படையினர், குடிமைப் பணியாளர்கள் ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த வருடம் 650 தொகுதிகளில் மொத்தம் 3322 பேர் போட்டியிடுகின்றனர்.

வெற்றியாளர் தேர்வு முறை அதிக வாக்ககள் பெற்ற வெட்பாளர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை. அரசியல் கட்சி சார்பாகவும், சுயாட்சையாகவும் போட்டியிடுவர்.

பிரித்தானிய பிரதமர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படமாட்டார். வெற்றிபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரை தேர்ந்தெடுத்து ராணி எலிசபெத்தால் நியமிக்கப்படுவார்.

போட்டியிடும் முக்கிய கட்சிகள் கன்சர்வேட்டிவ் தொழிலாளர் கட்சி தாராளவாத ஜனநாயகவாதிகள்ஸ்காடிஷ் நேஷனல் கிரீன் கட்சி பிரெக்சிட் கட்சி பிளைட் சிம்ரு முடிவுகள் எப்போது பொதுத்தேர்தல் வாக்குபதிவு டிசம்பர் 12அன்று காலை 7மணி முதல் இரவு பத்து மணி வரை நடைபெறும். அதன் பிறகு இரவு மற்றும் அடுத்தநாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

முடிவுகள் அனைத்தும் வெளியானபோது வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும்.

அதன் பிறகு அவர் பிரதமரின் பாரம்பரிய வீடான 10 டவுனிங் வீதிக்கு வரவேண்டும்.

பொதுவாக அவர்கள் வீட்டின் வெளியே நின்று தங்கள் கட்சியின் திட்டம் குறித்து பேசுவார்கள்

Comments (0)
Add Comment