செயற்குழுவை கூட்டுமாறு ரணிலுக்கு 26 ஐ.தே.க உறுப்பினர்கள் அழுத்தம்!!

ஐக்கிய தேசிய கட்சிக்குள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவ மாற்றங்களை கொண்டுவரும் வகையில் ஆராய உடனடியாக கட்சியின் செயற்குழுகூட்டத்தை கூட்டுமாறு கட்சியின் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் ஆராய வேண்டும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற முரண்பாடுகள் மற்றும் தலைமைத்துவ மாற்றங்கள் குறித்த கருத்துக்கள் உள்ள நிலையில் அது குறித்து ஆராயவும் அத்துடன் நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவை உடனடியாக கூட்டவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பியுள்ளனர்.

டிசம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் செயற்குழு கூட்டப்பட வேண்டும் என்றே அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment