தூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..!!

தூத்துக்குடியில் கார்- கண்டெய்னர் லாரி மோதிக் கொண்ட விபத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை அருகே தூத்துக்குடி- மதுரை சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் பேரன் நீரேந்திரன், பேத்தி ரம்யா, கார் டிரைவர் ஜோகன், ரம்யாவின் தோழி பார்கவி ஆகியோர் இறந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)
Add Comment