டெல்லி சட்டசபை தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு..!!!

டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்துவதற்கான வியூகத்தை, காங்கிரஸ் கட்சி வகுத்து முழுவீச்சில், செயல்பட்டு வருகிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்படும் என டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சோப்ரா அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 54 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘அரவிந்த் கெஜ்ரிவாலின் உறுதிமொழி அட்டை’ என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை முதல்வரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

* அடுத்த 5 ஆண்டுகளில் 24 மணி நேர மின்சார வினியோகம் செய்யப்படும்.

* 200 யூனிட்டுகள் வரை மின் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

* ஒவ்வொரு வீட்டுக்கும் 24 மணிநேர தூய்மையான குடிநீர் வினியோகம் உறுதி செய்யப்படும்.

* ஒவ்வொரு குடும்பத்துக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் திட்டம் தொடர்ந்து நீடிக்க செய்யப்படும்.

* டெல்லி அரசு பள்ளிகளில் தரமான கல்வியை உறுதி செய்து, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

* மொஹல்லா கிளினிக்குகள் வாயிலாக தரமான, அருகாமை மருத்துவம் டெல்லி வாசிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* டெல்லியை மாசில்லா மாநகரமாக உருவாக்கப்படும். முதல் கட்டமாக தற்போது உள்ள காற்று மாசுவை மூன்று மடங்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment