மயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..!!!

நாகை மாவட்டம் மயிலாடு துறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையன். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் இசை குழுவில் டிரம்ப் வாசித்து வந்தார். இவருக்கும் இவரது அக்காள் கணவர் முனுசாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையையொட்டி மணிகண்டன் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பொங்கல் முடிந்ததையடுத்து நேற்று இரவு தஞ்சையில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்றார். அங்கு ஆராய தெருவில் நடந்து சென்றபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர்.

இதில் வேகமாக ஓடிய மணிகண்டனை விரட்டி பிடித்து கீழே தள்ளி. அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மணிகண்டன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவல்அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment