சாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..!!!

சாம்பவர் வடகரை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சிவசங்கரி (வயது 18). இவர் தென்காசியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிவசங்கரிக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.

எனவே அவர் அதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த சிவசங்கரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சாம்பவர் வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து சிவசங்கரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)
Add Comment