இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?

இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்ததாக மலேசிய அரசாங்கம் தெரிவிப்பதை முற்றாக நிராகரிப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் தமது நாட்டுக்கு 150 கொள்கலன் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மலேசிய சுற்றுச் சூழல் அமைச்சர் யியோ-பி-இன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் மேற்படி கழிவுகளை மீண்டும் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் இருந்து மலேசியாவில் உள்ள குப்பைக் கொள்கலன்களை மீண்டும் மீள் ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மேலதிகமாக ஜப்பான், சிங்கப்பூர், போர்த்துகல், லிதுவேனியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் மலேசியாவிற்கு குப்பைகளை ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரிடம் அததெரண வினவியது.

இதற்கு பதிலளித்த அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலேசியாவிற்கு கழிவுகளை ஏற்றுமதி செய்யவில்லை என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment