12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது!!

மேல் மாகாணத்தில் இடம்பெறும் சகல குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கான விசேட கைது நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 19 ஆம் திகதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேல் மாகாண போக்குவரத்து பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 627 சந்தேக நபர்கள் மற்றும் 128 பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் உள்ளிட்ட 755 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தொடர்ந்தும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment