அரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்..!!

இங்கிலாந்து இளவரசராக இருந்த ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அரச பதவியில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவுக்கு ராணி எலிசபெத்தும் ஆதரவு தெரிவித்தார். மேலும் பங்கிஹாம் அரண்மனையும் அவர்கள் அரச கடமையில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது.

அரச பதவியை துறந்த பின், முதன்முறையாக ஹாரி சென்டபெல்லில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘‘மேகனும் நானும் திருமணமானவுடன் உற்சாகமாகவும், நம்பிக்கையுடனும் இருந்தோம். சேவை செய்வதற்காகவே இங்கு வந்தோம். ஆனால் நானும் என் மனைவியும் அரச பதவியை துறக்கும் இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை. பல மாத யோசனைகள், பல சவால்களுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராணி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கடந்த சில மாதங்களாக எனக்கும், மேகனுக்கும் அவர்கள் காட்டிய ஆதரவுக்கு, அவருக்கும் எனது குடும்பத்திற்கும் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்’’ என்று கூறினார்.

Comments (0)
Add Comment