சோட்டா ராஜன் மீது மேலும் நான்கு வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ..!!!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளியும், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவருமான சோட்டா ராஜன் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தபோது இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்தியா கொண்டு வரப்பட்ட சோட்டா ராஜன், டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மும்பை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சிபிஐ மேலும் 4 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது. கொலை, கொலை முயற்சி, பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment