பேருந்துக்காக காத்திருந்த பெண்மணி ஒருவரின் தாலிக் கொடி கொள்ளை.!!

பேருந்துக்காக காத்திருந்த பெண்மணி ஒருவரின் பத்தரைப்பவுண் தாலிக் கொடி முகமூடி கொள்ளையர்களினால் கத்தி முனையில் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை காலை 7.00 மணியளவில் பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூநகரியில் இருந்து பருத்தித்துறைக்கு வருவதற்காக காலை நேரம் பள்ளிக்குடா பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் மேற்படி பெண்மணி நின்றுள்ளார்.

அச்சமயம் கார் ஒன்றில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு முகங்களை முகமூடி அணிந்து மறைத்தவாறு காரிலிருந்து இறங்கி பெண் மணியின் கழுத்தில் நீளமான கத்தி ஒன்றினை வைத்து அச்சுறுத்தி அவரிடமிருந்த பத்தரை பவுண் நிறையுடைய தாலிக் கொடியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment