நாவிதன்வெளியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழா!! (படங்கள்)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் தைப்பொங்கல் திருவிழா நாவிதன்வெளி மத்திய முகாம் ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

வியாழக்கிழமை(23) காலை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன் ஏ.எம்.அப்துல் லத்தீப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முத்துபண்டா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், மாகாண மற்றும் மாவட்ட அரச உயர் அதிகாரிகள்,திணைக்களங்களின் தலைவர்கள், சர்வமத தலைவர்கள், கிராமமட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் வயல் நிலத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டு மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் பெண்களின் பங்குபற்றுதலுடன் கோலமிட்டு நெல்குற்றி புத்தரிசை பானையிலிட்டு பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளன.காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பொங்கல் திருவிழாவில் நாவிதன்வெளி பிரதேச கோவில்கள்இ பிரதேச செயலகம்இ திணைக்களம் என்பன பொங்கல் பானைவைத்து ஒரே நேரத்தில் பொங்கல் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவில் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
தமிழர்களின் பாரம்பரிய கலை கலாசார அம்சங்கள் உள்ளடங்கிய நிகழ்வுகள் பல இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

Comments (0)
Add Comment