கிராம இளைஞர்கள் ஊக்கமாக இருக்கிறார்கள் – அங்கஜன் எம்.பி..!! (படங்கள்)

கிராம இளைஞர்கள் ஊக்கமாக இருக்கிறார்கள் அவர்களுக்கான வேலைவாய்ப்பு எனும் ஊக்கத்தை கொடுக்கிறேன் – அங்கஜன் எம்.பி

கரணவாய் சித்தம்பாதி அம் பிகை சனசமூக நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு விழா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அம்பிகை சனசமூக நிலையத் தலைவர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு சனசமூக நிலையக் கட்டடத்தையும் சிறுவர் பூங்காவையும் திறந்துவைத்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை ஏழாம் வட்டார உறுப்பினரும் பருத்தித்துறை ஆதார வைத் தியசாலை மருந்தாளருமான கி .ஜெயானந்தன் , அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்
“இக் கிராமத்தின் இளைஞர்கள் துடிதுடிப்பாகவும் ஊக்கமாகவும் செயற்படுவதனை இவ் சனசமூக நிலையத்தின் திறப்புவிழா தருணத்தில் அவதானித்தேன். இக்கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு நான் ஊக்கம் கொடுக்கும் முகமாகவும் எதிர்கால சக்தியை கொடுக்கும் விதமாகவும் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து இவ் இளைஞர்கள் மூலம் இப்பிரதேசத்தை அபிவிருத்தி அடைய செய்வேன்.“ எனவும் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment