கடலில் மூழ்கி தந்தை மாயம் – தப்பிபிழைத்த மகன் ; புத்தளத்தில் சம்பவம்!! (படங்கள்)

புத்தளம் முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இன்று காலை சிறுகடலுக்கு மீனுக்காக விரிக்கப்பட்ட வலையை மீட்க சென்ற போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் படகு அசைந்ததால் படைகிலிருந்து தந்தை கடலில் தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது மகன் தந்தையை காப்பாற்ற முற்பட்டபோது மகனும் கடலில் வீழ்ந்துள்ளார்.

இதேவேளை தந்தையும் மகனும் நீச்சல் அடித்து கரைக்கு செல்ல முற்பட்ட போது தந்தைக்கு நீச்சல் அடிப்பதற்கு முடியாமல் போயுள்ளதால் கடலில் மூழ்கியுள்ளார். இதேவேளை மகன் நீச்சல் அடித்துக் கொண்டு மாம்புரி கடற்கரையை சென்றடைந்துள்ளார்.

பின்னர் மீனவர்கள் மற்றும் புத்தளம் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரையிலும் குறித்த தந்தை கண்டுப்பிடிக்கப்படவில்லையென கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை நாளை காலை 6 மணியளவில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment